சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அலைமோதும் மக்கள் கூட்டம்: இந்த விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் காலை முதல் இலட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்து வருகின்றனர். இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Chennai Air Show 2024: ஆகாயத்தில் நிகழ்ந்த அதிசயம்.. மெரினாவில் அலை அலையாய் திரண்டு கண்டுகளித்த மக்கள்!
நிரம்பி வழியும் ரயில் நிலையம்: இந்நிலையில் காமராஜர் சாலையில் காந்தி சிலை, போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வதுகிறது. மேலும் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
வெயிலும் விமான நிகழ்ச்சியும்: இந்த சாகச நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பார்வையாளர்கள் மக்கள் கூட்டம் மெரினா கடற்கரைக்கு சென்றடைய வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்