ETV Bharat / bharat

கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்வப்னாவுக்கு எப்படி அரசு வேலை கிடைத்தது?

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவுக்கு, கேரள அரசின் தகவல் தொடர்புத் துறையில் வேலை கிடைத்தற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Swapna
Swapna
author img

By

Published : Jul 8, 2020, 4:57 PM IST

திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்திற்கு வந்த ரகசிய பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ள நிலையில், அந்தத் தூதரகத்தில் முன்பு பணியாற்றிய பிஆர்ஒ ஸரித் என்பவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கேரள அரசின் தகவல் தொடர்புத் துறையில் மேலாளாராகப் பணிபுரிந்துவரும் ஸ்வப்னா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன்னதாக இவர் ஐக்கிய அரபு தூதரகத்திலும் பணியாற்றியிருந்தார். இதையடுத்து, அவரின் வீட்டில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் முக்கியமான நபர் ஒருவர் ஸ்வப்னாவுக்கு உதவுவதாக தகவல் பரவிய நிலையில், முதலமைச்சரின் செயலாளர் சிவசங்கர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு கேரள அரசில் எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு தற்போது பதில் வெளியாகியுள்ளது. ஸ்வப்னாவுக்கு ஐக்கிய அரபு தூதரகம் சிறந்த அலுவலருக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தச் சான்றிதழைப் பயன்படுத்திதான் மேலாளர் வேலையை ஸ்வப்னா பெற்றுள்ளார். ஆனால், தூதரகம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஸ்வப்னாவை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ‌

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.