மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகியவை நாட்டின் மிக முக்கிய நகரங்களாகும். இதில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறையினருக்கும் விமான நிலைய அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்துவருகின்றனர். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள், "விமான நிலையத்திலிருந்து வெளியேச் செல்ல பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நேற்று அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. இதனை குறிவைத்து பயங்கரவாதிகள் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட முயற்சிக்கிறார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கேதர்நாத் யாத்திரை: 400 கோடி வருவாய் ஈட்டி சாதனை!