ETV Bharat / bharat

நல்ல மருத்துவமனையில் என்னை சேருங்கள்: ஆந்திர மருத்துவர் கடிதம்!

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மனநல பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆந்திர மருத்துவர் கே. சுதாகர், தன்னை வேறு நல்ல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

doctor sudhakar
doctor sudhakar
author img

By

Published : May 28, 2020, 11:42 AM IST

Updated : May 28, 2020, 2:29 PM IST

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டிய மருத்துவர் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது தனக்கு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நான் நல்ல உடல் தகுதியுடன் இருந்தேன். எனக்கு தேவையில்லாத மருந்துகளை தந்ததன் விளைவாக ஒவ்வாமையில் அவதிப்படுகிறேன். இந்த மருந்துகளின் விளைவாக என் உடலில் தடிப்புகள், வாய்ப்புண் போன்ற உடல் ரீதியிலான துன்பங்களை அனுபவித்துவருகிறேன்.

எனவே என்னை நல்ல மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மருத்துவர் சுதாகர் வழக்கை சிபிஐ விசாரிக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : May 28, 2020, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.