பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்த புறாவை ஹிராநகர் செக்டாரில் மன்யாரி கிராம மக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த புறா, ரகசிய தகவல்கள் ஏதேனும் வைத்துள்ளதா என்ற கோணத்தில் உளவுத்துறை ஆய்வு செய்துவருகின்றது.
இது குறித்து கத்துவா பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர மிஸ்ரா பேசுகையில், "சந்தேகத்திற்குரிய புறாவை கிராம மக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் காலில் ரகசிய எண்களை பதிந்துள்ள வளையங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலன் - அமெரிக்க மருத்துவமனை தகவல்