ஆந்திர-தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஈ.எஸ்.எல். நரசிம்மா ஆளுநராக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த புதிய முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவிவ் அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத சுஷ்மா சுவராஜ் தற்போது ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக டெல்லி முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.