மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (ஜூன் 9ஆம் தேதி கணக்கின்படி) புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்டக்ஸ் என்னும் மருத்துவனையில் 56 வயதான அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் இவருடன் சேர்த்து நான்கு மருத்துவர்கள் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அந்த மருத்துவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்த இன்டக்ஸ் மருத்துவனையில், மேலும் மூன்று மருத்துவர்கள், எட்டு செவிலியருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்னென்ன ?