குஜராத் மாநிலம் டுமாஸ் சாலையில் ஒரு பண்ணை வீட்டில் இரவுநேர கேளிக்கை விருந்து நடப்பதாக டுமாஸ் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர் அப்பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில், 39 பெண்கள் கேளிக்கை விருந்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் அனைவரையும், மருத்துவப் பரிசோதனைக்காக சூரத் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து 13 கார்கள், ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பரிசோதனைக்குப் பின் அப்பெண்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மேட்டூர் சரபங்கா நீரேற்றம் திட்டத்தை 4ஆம் தேதி தொடங்கிவைக்கும் முதலமைச்சர்!