குஜராத்தில் உள்ள சூரத் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இரண்டு நகைக் கடைகாரர்கள் சேர்ந்து 6,690 வைரங்கள் பதிக்கப்பட்ட தாமரை வடிவிலான மோதிரத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த மோதிரத்தின் விலை ரூ.29 கோடி ஆகும். இதுவே உலகின் விலை உயர்ந்த வைர மோதிரமாக கருதப்படுகிறது.

உலக அளவில் இந்தியாவுக்கு ஒரு தனித்துவ அடையாளத்தை வழங்கவேண்டும் என்பதற்காக விஷால் அகர்வால், குஷ்பு அகர்வால் ஆகிய இரு நகைக் கடைகாரர்களும் சேர்ந்து இந்த தாமரை வடிவ மோதிரத்தை உருவாக்கினர்.
மேலும், 58.176 கிராம் எடையுள்ள இந்த தாமரை வடிவிலான மோதிரத்தின் இதழ்களில் 48 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனை செய்து முடிக்க இவர்களுக்கு ஒரு வருடங்கள் ஆனது. மேலும், இந்த தாமரை மோதிரம் 2018ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
இதையும் படிங்க : #SmarterLiving: இந்திய பயனர்களைக் கவர்ந்த மீ தயாரிப்புகளின் அசரடிக்கும் விலை #Highlights