ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி! - நிர்பயா வழக்கு

டெல்லி: நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

Supreme Court rejects review petition of Akshay Kumar Singh, நிர்பயா வழக்கு,அக்‌ஷய குமாரின் மறுசீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கு
author img

By

Published : Dec 18, 2019, 1:45 PM IST

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில், நீதிபதி பாப்டே இவ்வழக்கில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அக்‌ஷய குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு வரும்முன் நிர்பயாவின் தாயார், சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் எப்படியேனும் தள்ளுபடி செய்யும் என்று உறுதிபட தெரிவித்திருந்தார். .

நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனுவிற்கு இன்று நண்பகல் தீர்ப்பு!

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்பயா வழக்கு: தலைமை நீதிபதி பாப்டே விலகல்!

எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் முன்பே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.