கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் ஜேஈஈ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், ''கரோனா சூழல் இன்னும் ஒரு வருடம்வரை தொடரக்கூடும். அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது.
தற்போதைய சூழல், அரசு தேர்வு அலுவலர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே தேர்வின்போது உரிய பாதுகாப்புடன் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்கிறோம்'' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'சங்கு ஊதி மண்ணில் புரளுங்கள்; கரோனா வராது!' - மக்களை குழப்பும் பாஜக தலைவர்கள்