வடக்கு 24 பார்கனா - 2
ஹவுரா - 1
ஹூக்ளி - 2
கிழக்கு மித்னாபூர் - 1
கொல்கத்தா - 2
பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தகவல்
01:52 May 21
உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது
வடக்கு 24 பார்கனா - 2
ஹவுரா - 1
ஹூக்ளி - 2
கிழக்கு மித்னாபூர் - 1
கொல்கத்தா - 2
பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தகவல்
23:18 May 20
ஆம்பன் புயல் உயிரிழப்புகள்!
ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை புரட்டிப் போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்தனர்.
23:17 May 20
மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலின் தாக்கமும், வீரியமும் எப்படி இருந்தது என்பது குறித்த காணொலியை காணலாம்.
23:12 May 20
தீ பிடித்து எரிந்த மின்மாற்றி
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா நகர் பகுதியில் ஆம்பன் புயல் தாக்கியதன் காரணமாக தீ பிடித்து பட்டாசு போல வெடித்துச் சிதறிய மின்மாற்றி.
23:06 May 20
கட்டடத்தின் கூரையை பெயர்த்தெடுத்த ஆம்பன்
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் அசுர தாக்குதல் நடத்தியது. அதில் கொல்கத்தா நகரிலுள்ள ஒரு கட்டடத்தின் கூரையை மொத்தமாக ஆம்பன் புயல் வாரி சுருட்டிச் சென்றது.
20:45 May 20
ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் நான்கு பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் மணிக்கு 160 கி.மீ முதல் 170 கி.மீ வரையில் புயல் காற்று வீசியது.
15:20 May 20
கோர தாண்டவத்தை தொடங்கிய ஆம்பன்
ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது, மேலும், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13:17 May 20
அதிக கவனம் செலுத்தப்படும் - முதலமைச்சர் நம்பிக்கை
மேற்கு வங்கத்தின் "ரெட் பிளஸ் மண்டலங்களை", அதிக கவனத்தோடு கண்காணிக்கப்படும் என்றும், தான் கட்டுப்பாட்டு அறையில் தங்குவதாகவும், புயல் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
13:17 May 20
கனமழை எச்சரிக்கை! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 21ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசாவில் இந்த புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலைமையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, இன்று பிற்பகல் அல்லது மாலையில் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கடந்துச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
13:16 May 20
மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை
அதிபயங்கர புயலான ஆம்பன் நெருங்கி வருவதால், மே 20 வரை மேற்கு வங்கம், ஒடிசாவில் உள்ள அனைத்து மீன்பிடி நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13:16 May 20
195 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் - மத்திய அரசு எச்சரிக்கை!
ஆம்பன் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மிகவும் கடுமையான சூறாவளி புயலாக உருவெடுத்து மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அப்போது 195 கிலோ மீட்டர் வேகத்தில் அதிபயங்கர காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஆம்பன் புயல், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதங்களை ஏற்படுத்தும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆம்பன் புயலால், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயல் கரையை கடக்கும் முன் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். சூறாவளி செல்லும் பாதையில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
13:16 May 20
பெரும்புயல் பட்டியலில் ஆம்பன் புயலும் சேர வாய்ப்புள்ளது!
ஆம்பன் புயல் ஒரு மான்ஸ்டர் போல உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயல் கடலில் இருக்கும்போது மிகவும் வலுவாக இருக்கும். ஒடிசா அருகே கரையைக் கடக்கும்போது வேண்டுமென்றால் வலிமை கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தப் புயல் மான்ஸ்டர் போல இருக்கும். ஆம்பன் புயல் 915-925hpa (ஹெக்ட்டோபாஸ்கல்) வேகத்தில் இருக்கும். 940-950 hpa வேகம் வரை இது அடையக் கூடும். இதற்கு முன் வந்த புயல்கள் போலவே ஆம்பன் புயலும் வலிமையாக இருக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பெரும்பாலும் ஆம்பன் புயலும் சேர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
13:15 May 20
உச்ச உயர் தீவிர புயலாக மாறியது 'ஆம்பன்'
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல், தற்போது உச்ச உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வந்தது. சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் புயல் மையம் கொண்டது.
இதனால், தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. மத்திய வங்கக் கடல் பகுதியில் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
12:26 May 20
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. மே17ஆம் தேதி தீவிர புயலாக இருந்த ஆம்பன் மே18 அன்று அதித்தீவிர புயலாக உருவெடுத்தது. இந்த புயல் மேலும் தீவிரமாகி இன்று தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.