மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ளது. அங்கு அந்த அமைப்பின் நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் சமாதி நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரின் பாஜக எம்.பியும், பிரபல இந்தி நடிகருமான சன்னி தியோல், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஹெட்கேவர் சமாதியை நேரில் சென்று பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதற்கு முன் ஹெட்கேவர் சமாதிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, ஜாகீர் உசேன் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.