துனீசியாவின் பெர்கஸ் டூ லாக் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய இருவர் உயிரிழந்தனர். தூதரகத்திற்குள் நுழைய பயங்கரவாதி ஒருவர் முயற்சித்ததாகவும் அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ஆறு பேரில் ஐவர் காவல் துறையைச் சேர்ந்தவர் ஆவர். இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து தாக்குதலை நேரில் பார்த்த காவலர் ஒருவர் கூறுகையில், "சக ஊழியர் ஒருவர் காயமடைந்ததை பார்த்து என்னால் பணியை தொடர முடியவில்லை" என்றார்.
2011ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் துனீசியாவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் சிக்கி பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளால் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் குறைந்தது. தொடர் தாக்குதல் சம்பவத்தின் எதிரோலியாக துனீசியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம்!