உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிச. 01ஆம் தேதிமுதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1988ஆம் ஆண்டுமுதல் எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நாளை முன்னிட்டு ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அதில், எய்ட்ஸ் தொற்றில்லாத நிலையை உருவாக்கிட உலகளாவிய ஒற்றுமையை ஏற்போம், கடைமையைப் பகிர்வோம் என்னும் வாசகம் அடங்கி உள்ளது.
இதையும் படிங்க: பூரி கடற்கரையில் எழுந்தருளிய விநாயகர்!