சூடானில் அதிபராகப் பதவி வகித்தவர் ஓமர் அல் பஷீர். இவருடைய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததையெடுத்து, 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்நாட்டு ராணுவம் ஓமர் அல் பஷீரை கைதுசெய்து, ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, சூடான் அரசு ராணுவ ஆட்சியில் வழிநடத்தப்பட்டது.
பின்னர், ராணுவ ஆட்சியிலும் மக்கள் திருப்தி அடையாத நிலையில், 2019ஆம் ஆண்டு அப்தல்லா ஹம்டோக் அதிபராகப் பதவியேற்றார். ஆனாலும், ஹம்டோக் ஆட்சி, மறைமுக ராணுவ ஆட்சியாக இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கார்டூம் சாலையில் பயணித்த அதிபரைக் கொல்ல குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. திடீரென நடந்த இத்தாக்குதலில் நூலிலையில் அதிபர் ஹம்டோக் உயிர் தப்பினார். தற்போது, அவர் பாதுகாப்பாக உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையில், 2000-களில் நடைபெற்ற டார்பூர் மோதலில் தொடர்புடையவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகப் பிரதமர் ஹம்டோக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சிலையைத் தொட்டால் கொரோனா பரவும்' - சிலைக்கு முகமூடியிட்ட பூசாரி!