திருப்பதி என்று சொன்னாலே ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக நம் நினைவிற்கு வருவது 'திருப்பதி லட்டு' தான். திருமலைக்குச் சென்று திருப்பதி லட்டை வாங்காமல் திருப்பியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் திருப்பதி திருமலை கோயில் மூடப்பட்ட நிலையில், திருப்பதி லட்டுக்கு உண்டான மவுசை பயன்படுத்தி ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் திருப்பதி தேவஸ்தானம் அதனை மானிய விலையில் விற்க முடிவெடுத்தது.
அந்த வகையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற திருப்பதி லட்டுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தேவஸ்தான அலுவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மே 25ஆம் தேதி முதல் இன்றுவரை 1.10 லட்சம் லட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்