தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஐஐடி மாணவர் விடுதியில், மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு விடுதி காப்பாளர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் உத்தரப் பிரதேசம் மாநிலம், வரணாசி மாவட்டம், நரியா லங்கா பகுதியைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரோ சார்லஸ்(20) என்பதும், இவர் ஐஐடியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.