கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தற்போதைய இடைக்கால நிதிஅமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான எந்த திட்டமும் இடம்பெறவில்லை என்பதற்காக நாளை (பிப்.7) மாணவ இயக்கங்கள் பேரணி நடத்தவுள்ளனர்.
இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ சங்கம், ஆம் ஆத்மி மாணவ அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ சங்க தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 10 சதவீதம் பயன்படுத்தலாம். ஆனால், மோடி அரசு அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.