ETV Bharat / bharat

இந்தியாவில் 1 மில்லியன் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று!

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்துள்ளது.

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/governor-kiranbedi-visit-health-department/tamil-nadu20200718211953827

author img

By

Published : Jul 19, 2020, 3:13 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 10 லட்சத்து மூன்றாயிரத்து 832 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராடு இந்தியா: 1 மில்லியன் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று!

இதில் புதிதாக 687 பேர் உயிரிழந்ததையடுத்து, நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆயிரத்து 602ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 63 விழுக்காடு மக்கள் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில் மொத்தமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இருந்தபோதிலும் கரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் கிராமங்களை பெரிதாக பாதிக்கவில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஊரடங்கு நடைமுறையால் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. இதிலும் பல மாநிலங்கள் தங்களின் பொருளாதார சரிவை சீர்ப்படுத்த சில தளர்வுகளை அறிவித்துள்ளன.

இது குறித்து, உலக சுகாதார ஆராய்ச்சியாளர் மருத்துவர் ஆனந்த் பன் கூறுகையில், “நகரங்களில் ஏற்கனவே, கரோனா பரவலை இந்தியா கண்டுள்ளது. ஆனாலும், இந்திய கிராமங்களில் தொற்று பரவல் அதிகரிக்க கூடும்” என்றார்.

ஆரம்பத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் மிக குறைவுதான். மார்ச் 24ஆம் தேதிக்கு பிறகுதான் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். இதன் மூலம் நாடு பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலையிலந்த மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இருந்தபோதிலும் அப்போது அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் குறைவுதான். இந்தியாவின் மக்கள் நெருக்கடி காரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை வைரஸ் பரவியது.

ஆரம்பத்தில், இந்தியாவில் மிகக்குறைவாகவே சோதனைகள் செய்யப்பட்டன. பின்னர், ஜனவரி மாதத்திலிருந்து ஒரு ஆய்வகத்திலிருந்து ஆயிரத்து 200க்கும் அதிகமான சோதனைகள் செய்யப்படுகின்றன. அதில் மொத்தமாக ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளை செய்துவருகிறது.

அரசு தரப்பில் எத்தனை முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டாலும், நாமும் சுகாதார முறைகளை பின்பற்றினால் மட்டுமே கரோனா வைரஸ் போன்று எந்த பெருந்தொற்று வந்தாலும் போராடும் திராணி இருக்கும் என பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...கட்டுப்பாட்டு மையத்தில் துணைநிலை ஆளுநர் ஆய்வு - அலுவலர்களிடம் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.