ETV Bharat / bharat

பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம்! - பாஜக ஆம் ஆத்மி போட்டி

உண்மையான போட்டி என்பது மக்களை ஈர்க்கும் மோடிக்கும் அரசுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கியுள்ள அரவிந்த் கெஜர்வாலுக்கும்தான். பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவரும் நிலையில், என்ன மாதிரியான உத்திகளைக் கடைபிடித்து பாஜக டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Delhi politics
Delhi politics
author img

By

Published : Jan 9, 2020, 9:31 PM IST

Updated : Jan 9, 2020, 10:02 PM IST

உலகில் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட டெல்லியின் மக்கள் தொகை 140 நாடுகளை விட அதிகம். 70 சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய டெல்லி சட்டபேரவைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. இதன்மூலம் நமது நாட்டின் தலைநகர் டெல்லியின் அரசியல் சூழ்நிலை சுவாரஸ்சியமானதாக மாறியுள்ளது.

சுமார் ஒரு கோடியே நாற்பத்தியேழு லட்சம் வாக்காளர்களுக்காக. தேர்தல் ஆணையம் 13,750 வாக்குச் சாவடிகளையும் 90 ஆயிரம் தேர்தல் பணியாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. முதன்முறையாக 80 வயதுக்கு மேலுள்ள மிக மூத்த குடிமகன்களும் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் நாள் வரை வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பது, வாக்குச் சீட்டில் QR code உள்ளிட்டவையும் இந்தத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தலைநகருக்கு ஆறு முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. முதல் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் பாஜக வென்று ஆட்சியை பிடித்தது. பின் ஷீலா தீக்ஷித் தலைமையில், காங்கிரஸ் மூன்று முறை ஆட்சியை பிடித்தது.

Delhi politics
சோனிய காந்தி

நவம்பர் 2012ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் வருகைக்கு பின் டெல்லியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்குவந்தது. 2013, 2015 ஆகிய இரு தேர்தல்களில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி டெல்லிவாசிகளுக்கு விருப்பமான கட்சியாக உருவெடுத்து. குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 67 இடங்களை கைப்பற்றியது.

இருந்தபோதும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் 26 விழுக்காடும், மக்களவைத் தேர்தலில் 18 விழுக்காடும் மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் பெற முடிந்தது. இது எதிர்கட்சிகளின் மத்தியில் புதியதொரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2014ஆம் மோடி அலையால் டெல்லியிலுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. ஆனால், அதற்கு அடுத்தாண்டே நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் 70 தொகுதியில், வெறும் மூன்றில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.

Delhi politics
நரேந்திர மோடி

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியில் எதிர்பாதாராத வெற்றியை பாஜக பெற்றது. இருந்தபோதும், சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லிவாசிகளின் மனநிலை எப்படி மாறும் என்பது குறித்த கவலை பாஜகவிடம் உள்ளது. பரபரப்பான இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது போல இருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும்போது, "நாம் அனைவரும் முதல் தர குடிமகன்கள்; ஆனால் நாம் மூன்றாம் தர அரசால் பாதிக்கப்படுகிறோம்" என்றார். மேலும், அரசியலில் புரையோடியுள்ள ஊழலை ஒழிக்கும் வகையில், துடைப்பத்தை தனது சின்னமாக தேர்ந்தெடுத்தார், தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றியையும் பெற்றார்.

Delhi politics
அரவிந்த் கெஜர்வால்

அந்தத் தேர்தலில், 29.5 விழுக்காடு வாக்குகளுடன் ஆம் ஆத்மி 28 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரவு தர, ஆட்சியையும் பிடித்தது. ஏழு வாரத்தில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜான் லோக்பால் மதோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களின் பெருவாரியான ஆதரவால், ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியின் இருப்பை நீடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகள் பலனற்று போனது அனைவருக்கும் தெரியும். பஞ்சாப்பை தவிர்த்து, மற்ற பல மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றதுள்ளது. இது தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு, மக்களிடைய பெரிய வரவேற்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

Delhi politics
அரவிந்த் கெஜர்வால்

கடந்தாண்டு ஜூலை மாதம், உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இத்தீர்ப்பில், டெல்லி துணைநிலை அளுநர் காவல் துறை, சட்ட ஒழுங்கைத் தவிர மற்றவற்றில் அமைச்சரவையின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இரு தரப்பிற்குமிடையே உள்ள அதிகார வரம்பு குறித்து தெளிவாக விளக்கியது இந்த் தீர்ப்பு.

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி முன்னேறவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டிவருகிறது. காங்கிரஸ் கட்சியோ, ஷீலா தீக்ஷித் ஆட்சியின் போது அடைந்த முன்னேற்றத்தைக் கூட ஆம் ஆத்மி கட்சியால் நீடிக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறது. இருப்பினும் ஆம் ஆத்மி கட்சி, 'அச்சே பிட்டேய் பான்ச் சால், லகே ரகோ கெஜிர்வால்' (ஐந்தாண்டு கெஜ்ரிவாலின் ஆட்சி சிறப்பானது, அதை விட்டுவிடார்கள்) என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ளது.

2015 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் கிரன் பேடியை பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கியது மக்களை ஈர்க்கவில்லை. இருப்பினும், கடந்த முறை பெற்ற 34 விழுக்காடு வாக்குகளுடன், இன்னும் ஏழு விழுக்காடு வாக்குகளைப் பெற பாஜக முனைப்புக் காட்டியுள்ளது.

Delhi politics
மோடி அமித் ஷா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாற்றாக ஒரு முதலமைச்சரை காங்கிரஸ், பாஜகவால் முன்னிறுத்த முடியவில்லை, இதைத்தான் ஆம் ஆத்மி முன்னிறுத்துகிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களை முன்னிறுத்தி வெல்லும் முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது.

2015 சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 9.7 விழுக்காடு வாக்குகளை பெற்றபோதும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏழு தொகுதியில் ஐந்தில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பெரும் முனைப்பு காட்டிவருகிறது. மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவுக்கும் டெல்லியில் அதிகாரத்திலுள்ள ஆம் ஆத்மிக்குமிடையே நேரடி போட்டியுள்ள சூழலில், கெஜிர்வால் அரசு கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அடைந்த முன்னேற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

1731 முறையற்ற குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கியதற்கு பாஜக உரிமைகோரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியோ அப்பகுதிகளுக்கு மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்புகளுக்கு உரிமைகோருகிறது. ஐ.ஏ.என்.எஸ். - சி கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையான போட்டி என்பது மக்களை ஈர்க்கும் மோடிக்கும் அரசுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கியுள்ள அரவிந்த் கெஜர்வாலுக்கும்தான். பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவரும் நிலையில், என்ன மாதியான உத்திகளைக் கடைபிடித்து பாஜக டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ' டெல்லியை குப்பைகளின் தலைநகராக்கிய பாஜக ' - கெஜ்ரிவால் விளாசல்!

Intro:Body:

Struggles of Political Parties

Conclusion:
Last Updated : Jan 9, 2020, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.