ETV Bharat / bharat

கிருமிநாசினிகளால் தோல்களுக்கு ஏற்படும் ஆபத்து?

author img

By

Published : Apr 15, 2020, 11:34 AM IST

சோடியம் ஹைபோகுளோரைட், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவற்றைக் கொண்ட கிருமிநாசினிகளைப் பயன்படுத்தினால் தோல்களில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

disinfectants
disinfectants

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சோப் மூலம் அடிக்கடி கைகளைக் கழுவியோ அல்லது கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியோ கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலும் சோடியம் ஹைபோகுளோரைடும் ஹைட்ரஜன் பெராக்சைடும் கிருமிநாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை மனிதர்கள் மீது நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது என்று பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சோடியம் ஹைபோகுளோரைட் என்பது ஒரு வலுவான கிருமிநாசினி. அசுத்தமாக இருக்கும் பொது இடங்களைச் சுத்திகரிக்க இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இவை நேரடியாகத் தோலில்படும்பட்சத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளன. இதேபோல், ஹைட்ரஜன் பெராக்சைடையும் ஒரு அசுத்தமான இடங்கள் மீதே பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது இதுபோன்ற கிருமிநாசினிகள்தான் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களைக்கூட ஒரு விழுக்காடு சோடியம் ஹைபோகுளோரைடைக் கொண்டு சுத்தம் செய்தால்போதும் என்கிறது சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகள்.

இது குறித்து AMAI அமைப்பின் தலைவர் ஜெயந்திபாய் படேல் கூறுகையில், "சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவை மனிதர்கள் மீது தெளிக்கப்படுவது குறித்து சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதுபோன்ற கிருமிநாசினிகள் முறையாகப் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறோம். மேலும், இது போன்ற கிருமிநாசினிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இவை நேரடியாக மனிதர்களின் தோலில் படக்கூடாது" என்றார்.

மேலும், இந்தியாவில் கிருமிநாசினிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏப்ரல் 20க்கு பின் எவ்வாறு இயங்க வேண்டும்? உள்துறை அமைச்சகம் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.