ETV Bharat / bharat

குடும்ப உறவை வலுவாக்குங்கள் - கரோனா கொடுத்த பொன்னான வாய்ப்பு

சற்றே பின்னோக்கிப் பாருங்கள் ! எதிர்காலத் திட்டங்களை உருவாக்குங்கள்! சாதனைகள், தோல்விகளை மதிப்பீடு செய்யுங்கள்!கோவிட்-19 குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! மூன்று வாரம் இப்படியே செய்துபாருங்கள்!

author img

By

Published : Mar 28, 2020, 8:23 AM IST

குடும்ப உறவை வலுவாக்குங்கள்
குடும்ப உறவை வலுவாக்குங்கள்

கரோனா வைரஸானது எல்லா தேசிய இனங்களையும் எல்லா வயதுப் பிரிவினரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தன் கட்டுப்பாடுதான். இந்த மூன்று வாரங்களில் வீட்டில் மனச்சோர்வு அடையாமல் தவிர்ப்பதற்கான பயனுள்ள குறிப்புகளைப் பகிர்கிறார், ஓய்வுபெற்ற பொறியாளரும் வாஸ்து நிபுணருமான கிருஷ்ணதிசேசு பெந்தபதி.

”மொத்த குடும்பமும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், பழைய குடும்பப் படத்தொகுப்புகளை எடுத்துப்பார்க்கலாம். பழைய படங்களைப் பார்ப்பதன் மூலம் பள்ளி, கல்லூரி நாள்கள், திருமணம், நண்பர்களுடனான நினைவுகளை அசைபோடலாம். அவற்றை உங்கள் குழந்தைகள், பேரப் பிள்ளைகளுக்கு காட்டலாம். இந்தப் படங்கள் மூலம் பழைய மரபு, பழக்கவழக்கங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூற முடியும்.

பல நாள்கள் சும்மாவே வீட்டில் இருப்பது கடினமான ஒன்று. இப்படியான நேரத்தில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுவாக இருப்பதற்கு, உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் நேரம் ஒதுக்க முடியும். எளிமையான பயிற்சிகள் செய்வது நல்லது. உடற்பயிற்சி சலித்துப் போகும்போது, இசைக்கு ஏற்ப கால்களை அசைப்பதுகூட பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

திருமணமான புதிதில் உங்களின் நாள்களை நினைத்துப் பாருங்கள்; நீங்களும் உங்கள் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு லயிப்போடு இருந்தீர்கள்! பொறுப்புகள் அதிகரிக்கும் போது அப்படியான தருணங்கள் அரிது ஆகிவிடும். மீண்டும் இப்போது ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்கள் மனைவிக்கு சமையலிலும் வீட்டு வேலைகளிலும் உதவி செய்யுங்கள். அவருடைய சமையல் திறனைப் பாராட்டுங்கள். அவருடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு சரியான முன்மாதிரியாக விளங்குவீர்கள்.

தோட்டக் கலையானது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு ஆகும். வேலை நிலைமைகள் காரணமாக அதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியாதவர்கள், இந்த தனிமைப்படுத்தல் காலத்தைப் பயன்படுத்தலாம். செடிகளைப் பராமரிப்பதற்கு சமூக உறவாடல் தேவை இல்லை. எனவே, இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் இது பொருத்தமான பொழுதுபோக்கு ஆகும். மொட்டை மாடிகளில் அல்லது பால்கனிகளில் காய்கறிகளை வளர்க்க முடியும்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ தொலைபேசியிலோ நேரிலோ பேசுவதற்கு நேரம் இருப்பதில்லை. இப்போது போதுமான நேரம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் தொலைபேசியை எடுத்து நண்பர்களிடமும் தொலைவில் வசிக்கும் உறவினர்களிடமும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன ஏது என உரையாடுங்கள். உங்களின் சிறு வயது நினைவுகளை அசைபோடுங்கள்! கரோனா வைரஸ் தாக்கம் குறித்த முன் எச்சரிக்கைகளையும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

கூட்டுக் குடும்பங்களில் பாட்டி, தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்வார்கள். சிறு குடும்பமென வந்த பிறகு இது மிகவும் அரிதாகி விட்டது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க விரும்பினாலும்கூட அவர்களின் வேலையினால் அதற்கான நேரம் இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து அவர்களுடனேயே இருக்கப்பாருங்கள்!

நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக, நம் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப்பார்க்க நேரம் இருப்பதில்லை. நம்மில் நிறைய பேர் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதே இல்லை. இந்த தருணத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, கடந்த சில ஆண்டுகளில் அது எப்படியானதாக இருந்திருக்கிறது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எதை மாற்ற விரும்புகிறீர்கள் என்று வாழ்க்கையை மதிப்பீடு செய்யப் பாருங்கள்.

ஒரே கூரையின் கீழ் மொத்த குடும்பமும் வசித்தாலும் குழந்தைகள் அவர்களின் பள்ளி தொடர்பானவற்றில் மூழ்கியபடி இருக்கிறார்கள், பெரியவர்கள் தங்கள் வேலைக் கடமைகளுக்குள் சிக்கியவர்களாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். கடைசியாக, உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது எப்போது என்பது நினைவிருக்கிறதா? இந்தத் தனிமைப்படுத்தல் காலத்தை, ஒன்றாக சாப்பிடுவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நெருக்கடியான சவாலை குடும்ப ரீதியாக எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி உரையாடுங்கள்! ஒவ்வொருவரும் மற்றவர்களின் சுமையைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்! இவை எல்லாவற்றையுமே பாதுகாப்பான இடைவெளியில் மேற்கொள்ளவேண்டும்.

அலமாரிகளின் வருகைக்குப் பிறகு, உடைகளையும் மற்ற பொருள்களையும் அவற்றில் மக்கள் குவிக்கத் தொடங்கினர். பெரும்பாலானவர்கள் அதை ஒழுங்குபடுத்துவது குறித்து அக்கறை கொள்வதில்லை. உங்கள் அலமாரிகளில் வைக்கப்பட்டு உள்ள பல பொருள்கள் பயனற்றவை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, அலமாரிகளில் உள்ளவற்றை ஒழுங்குபடுத்தவும் அதிலுள்ள தூசிதட்டி தூய்மையாக்கவும் பயனில்லாத பொருள்களைத் தூக்கிப்போடவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.

கையடக்கக் கருவிகளின் வருகைக்குப் பிறகு வாசிப்புப் பழக்கமானது கிட்டத்தட்ட அற்றுப் போய்விட்டது எனலாம். எனவே, புத்தக விரும்பிகள் தங்கள் புத்தகங்களைத் தூசுதட்டுவதற்கு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களை எடுத்துப் பார்ப்பதுடன் அவற்றைப் படிக்கவும் தொடங்குங்கள். போதுமான புத்தகங்கள் இல்லை என்றால் மின் புத்தகங்கள் உங்களுக்கு தோதாக இருக்கலாம்.

இந்நிலையில் இதுபோன்று நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது சாலச் சிறந்தது”.

இதையும் படிங்க்: கட்டணம் கேட்டால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.