ETV Bharat / bharat

அங்கன்வாடி மையங்களில் கழிவறை அமைக்க நடவடிக்கை!

புதுச்சேரி: அங்கன்வாடி மையங்களில் கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காரைக்கால் ஆட்சியர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Oct 23, 2020, 4:27 PM IST

Updated : Oct 23, 2020, 6:13 PM IST

மத்திய அரசு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் குறித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளின் செயல்படுகள் குறித்தும் விவாதித்தனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், "மாணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கவேண்டும். கழிவறை வசதிகளை முழுமையாக அனைத்து அங்கன்வாடிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும்" என்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "காரைக்கால் மாவட்டத்தில் 172 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. அதில் 55 அங்கன்வாடிகளில் கழிவறை வசதி இல்லை. அவற்றை கட்டுவதற்கு புதுச்சேரி அரசிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மன நலம் குன்றியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:எங்க ஊருக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தர முடியுமா? மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்!

Last Updated : Oct 23, 2020, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.