உலக மனநல நாள் இன்று (அக். 10) கொண்டாடப்படும் நிலையில் புத்த மதத் தலைவரான தலாய் லாமா தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியில் கோவிட்-19 பாதிப்பு அதன் தாக்கங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "உலகம் தற்போது பெரும் சோதனைக் காலத்தைச் சந்தித்துவருகிறது. கரோனாவால் மனித குலம் சந்தித்துவரும் துயரத்தை அளவிட முடியாது. இருப்பினும் நடந்ததை மாற்றும் சக்தி நமக்கில்லை.
எனவே, இதுபோன்ற பெருந்தொற்றை எதிர்வரும் காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. அதை நோக்கி நமது ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து விரைவில் நாம் விடுபட வேண்டும் என வழிபட்டுவருகிறேன். உலக நன்மைக்காகவும் குறிப்பாக இந்தியாவின் நன்மைக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் களச் செயல்பாட்டாளர்களின் உழைப்பிற்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் தலாய் லாமா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பு : புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு