ETV Bharat / bharat

அனைத்து காச நோயாளிகளுக்கும் ஒரு மாத மருந்து வழங்க உத்தரவு

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து காச நோயளிகளுக்கும் ஒரு மாத காலத்திற்கான மருந்தை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

MHA
MHA
author img

By

Published : Apr 25, 2020, 12:48 PM IST

கரோனா நோய் தொற்று பேரிடராக உருவெடுத்து நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் அனைத்து மாநிலங்களும் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. இந்தச் சூழலில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சையில் எந்தவித சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய சுகாதாரத் துறை கவனம் செலுத்திவருகிறது.

இந்தியாவில் நீரிழிவு நோய், காச நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதை உறுதி செய்ய மருந்து உற்பத்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதில் சுணக்கம் எழுந்துள்ளாதக ஆங்காங்கே புகார் எழுந்துவருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள காச நோயாளிகளுக்கு மாநில அரசுகள் ஒரு மாத கால மருந்தை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய சுகாதரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், காச நோய் தொடர்பான உதவிகளுக்கு 1800-11-6666 என்ற இலவச எண்ணை நோயாளிகள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் ‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.