ETV Bharat / bharat

கூட்டணி ஆட்சியில்லா மாநிலங்களிலேயே சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - மகாராஷ்டிர துணை முதலமைச்சர்

author img

By

Published : Jan 28, 2020, 8:21 PM IST

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநிலங்களில் கூட்டணி ஆட்சி இல்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

Ajit Pawar
Ajit Pawar

இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார், "கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

அந்த மாநிலங்கள் எல்லாம் ஒரு கட்சியின் கீழ் ஆட்சியில் உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டாலும் மாநிலத்திலுள்ள மக்கள் பாதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் (உத்தவ் தாக்கரே) கூறியுள்ளார். இதுவே எங்கள் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திங்கள்கிழமை(ஜனவரி 27) தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.