கடந்தாண்டு தெலங்கானா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி வெகுவாக பாதித்தது. இதனால் வெங்காய விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதுகுறித்து நூகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், "இதுவரை துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 12 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளோம். இறக்குமதி செய்யப்பட்டதில் ஆயிரம் டன் வெங்காயம் ஏற்கனவே டெல்லி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் 36 ஆயிரம் டன் வெங்காயம் இம்மாத இறுதியில் இந்தியா வந்தடையும் என்றும் ராம்விலாஸ் பாஸ்லான் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி 118 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம், தற்போது 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, மும்பையிலும் 120 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கு வெங்காய விலை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல்: மலையாள நடிகர்கள் கண்டனம்!