டெல்லி சென்றுள்ள தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அங்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து, மாநிலத்தில் மேலும் ஆறு விமான நிலையங்களை கட்டுவதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
முன்னதாக 2014ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது பிரதமர் மோடியிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்திருந்ததாக ஹர்தீப் சிங் பூரியிடம் சந்திர சேகர ராவ் அப்போது கூறினார்.
அதன்படி, பசந்த்நகர் (பெடப்பள்ளி மாவட்டம்), மம்னூர் (வாரங்கல் நகர்ப்புறம்), ஆதிலாபாத், ஜக்ரன்பள்ளி (நிஜாமாபாத்), தேவர்காத்ரா (மெஹபூப்நகர்) மற்றும் பத்ராட்ரி கோத்தகுடெம் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்களை அமைக்க முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் மட்டுமே ஒரே ஒரு விமான நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அணு சக்தியால் இயங்கும் விமானத்தை உருவாக்கவுள்ளோம்' - பிரான்ஸ் அதிபர்!