ETV Bharat / bharat

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழுக்கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்! - புதிய வேளாண் சட்டங்கள்

புதுச்சேரி: புதிய வேளாண் சட்டங்கள், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Congress Party in Pondicherry
Congress Party in Pondicherry
author img

By

Published : Nov 2, 2020, 7:11 AM IST

புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று (நவ.1) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் , புதுச்சேரி மேலிடபார்வையாளர் சஞ்சய் தத், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி சுப்ரமணியன், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி மாநில வளர்ச்சியை முடக்கச் செய்கின்ற வகையில் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசும், ஆளுநர் என்ற போர்வையில் பாஜக அரசின் பிரதிநிதியை இங்கு அனுப்பி காங்கிரஸ் அரசை முடக்கி, புதுச்சேரியை தமிழ்நாடோடும், மாகே பகுதியை கேரளாவோடும் , ஏனாம் பகுதியை ஆந்திர பிரதேசத்தோடும் இணைக்கின்ற முயற்சியில் மத்திய அரசும், புதுச்சேரி மாநில ஆளுநரும் ஈடுபட்டுருப்பதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு எதிரான மத்திய வேளாண் சட்டங்கள், வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் சட்டம், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் போராடிய விவசாயிகளுக்கு பாராட்டும் நன்றிகள் தெரிவித்தும் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. புதிய வேளாண் சட்டங்களை, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: இரும்பாலை பாய்லர் வெடித்த விபத்தில் 9 பேர் படுகாயம்: 2 பேர் கவலைக்கிடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.