பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே. இதையடுத்து திருப்பதிக்கு வந்த அவர் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தார்.
இந்த ஆன்மீக பயணம் மேற்கொண்ட ராஜபக்ஷேவுக்கு பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. இதன் பின்னர் கடுமையான பாதுகாப்புக்குப் பின்னர் சாலை வழியாக புனித மலையை அடைந்தார்.
இதன் பின்னர் இரவு திருமலையில் தங்கியப்பின் இன்று மலையப்ப சுவாமியை ராஜபக்ஷே தரிசிப்பார் என்று கூறப்படுகிறது. பெருமாளை தரிசித்தபின் கொழும்புவுக்கு திரும்பிச் செல்வார்.
இதையும் படிங்க: பிரசவ வலியால் துடித்து கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற எம்.எல்.ஏ.