ETV Bharat / bharat

ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுப்பு - ஸ்பைஸ்ஜெட் அதிர்ச்சி முடிவு

ஊரடங்கைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன் ஊழியர்களை சுழற்சி முறையில் ஊதியமற்ற விடுப்பு அளித்து அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Apr 19, 2020, 8:29 PM IST

ஸ்பைஸ்ஜெட் விமானம்
ஸ்பைஸ்ஜெட் விமானம்

கரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவைகள் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கி வருகிற மே மூன்றாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 50,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் ஊதியமற்ற விடுமுறை அளிக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழிமுறை சுமார் மூன்று மாதங்கள் வரை பின்பற்றப்படும் எனவும், ஏப்ரல் மாதம் எவ்வளவு நாட்கள் ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பதைக் கணக்கில் கொண்டு அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கின் மத்தியில் உணவுப் பொருள் விலையை உயர்த்திய பதஞ்சலி நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.