ETV Bharat / bharat

மைசூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து; 4 ஹோட்டல் ஊழியர்கள் பலி!

மைசூர்: நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Speeding lorry kills 4 in Mysuru road accident
author img

By

Published : Jul 24, 2019, 12:28 PM IST

டி. நரசிபூர் - மைசூர் நெடுஞ்சாலையில் நான்கு இளைஞர்கள், இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு செல்ல நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி, அவர்கள் இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நால்வரும் பலத்த காயமடைந்தனர். இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் ராகவேந்திரா, மதுகுமார், மது, அகமத் கான் என்றும், நால்வரும் ஒரே ஹோட்டலில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. நண்பர் ஒருவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. வேகமாக லாரியை இயக்கி உயிர்பலி ஏற்படுத்திய ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மைசூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து; 4 ஹோட்டல் ஊழியர்கள் பலி!

ஒரு விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Intro:Body:

L:\News\Input\24jul2019\KARNATAKA\MYS ACCIDENT

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.