அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பூங்காவின் 60 விழுக்காடு நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி விட்ட நிலையில், அங்கு வாழும் வன உயிர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைக்கப் போராடும் மோசமான நிலை உருவாகியுள்ளது.
இதனால் பூங்காவின் மறுபக்கதிலிருக்கும் உயரமான பகுதியை நோக்கி அங்கு வாழும் விலங்குகள் செல்கின்றன. ஆனால் அப்பகுதியை அடைய காசிரங்கா தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.
அப்படி சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபடும் அபாயமும் உள்ளது. வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவிலிருந்து வெளியேறும் விலங்குகளைப் பாதுகாக்கும் வண்ணம் இந்த டைம் கார்டு சிஸ்டம் என்னும் மென்பொருள் தொடக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வன அலுவலர்கள் ரூ. 5 ஆயிரம் அபராதமாக விதித்துள்ளனர். விலங்குகளின் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: காட்டு ராஜாக்களை அழிப்பது காட்டை துண்டாடுவதற்கு சமம்!