ஜம்மு காஷ்மீர் மாநிலம் குன்மோஹ் பகுதியைச் சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளி முகமது ஷபாய் லோனே. நான்காம் வகுப்பு படிக்கும்போது பார்வையை முற்றிலுமாக இழந்த லோனே, தனக்கு ஏற்பட்ட குறைபாட்டால் முடங்கிவிடவில்லை.
தனது வீட்டினருக்கும், சமூகத்திற்கும் பாரமாக இருக்க விரும்பாத லோனே, தன்னம்பிக்கையுடன் தற்போது தேநீர் நிலையம் ஒன்றை நடத்திவருகிறார்.
இளம்வயதில் சந்தித்த சோதனைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறும் லோனே, அரசையோ, மற்றவர்களையோ சார்ந்திருக்க விருப்பமில்லை என்கிறார்.
'உடல்குறைபாடு உள்ள நபர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது' என தனது வாழ்க்கை அனுபவம் மூலம் தெரிவிக்கும் இவர், தனது உழைப்பால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகிறார்.
பார்வைக் குறைபாடு இருந்தால் என்ன? தன்னம்பிக்கையால் உயர்ந்து சமூகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார் முகமது லோனே.
இதையும் படிங்க: காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி!