ETV Bharat / bharat

ஆப்கானிஸ்தானில் நம்பிக்கைக் கீற்று?

கடந்தாண்டு ஜூலையில், பூமியின் பரப்பில் ஆப்கானிஸ்தானின் தோற்றத்தை துடைத்து அழிக்க முடியும். ஆனால் அதற்காக 10 மில்லியன் மக்களைக் கொல்ல விரும்பவில்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று அமைதி காக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author img

By

Published : Mar 6, 2020, 2:44 PM IST

நம்பிக்கைக் கீற்று
நம்பிக்கைக் கீற்று

ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவருவதற்கான போரைத் தொடங்க 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவானது ’ஆப்கானிஸ்தானுக்கு நிரந்தரமான சுதந்திரம்’ என்கிற நடவடிக்கையை ஏவியது. அல்-கொய்தா,தாலிபான் இயக்கங்களுக்கு ஒரு முடிவை உண்டாக்க நேட்டோ நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒசாமா பின்லேடனைப் படுகொலை செய்து, அல்-கொய்தா இயக்கத்துக்கு தலைவர் இல்லாத நிலையை உருவாக்கியது. ஆனாலும் தாலிபான் இயக்கத்தினர் தங்கள் பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்தனர்.

ஆப்கானிஸ்தான் போரானது வளைகுடா போரைப் போல அல்லாமல், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி கூறியிருந்தார். ஆனபோதிலும் இப்போது தாலிபான்களுடன் அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருக்கிறது. அது, 18 ஆண்டுகள் நீடித்த மோசமான இரத்தச்சகதியான போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கத்தார் நாட்டின் தோகா நகரில் அமெரிக்கா மற்றும் தாலிபான் பிரதிநிதிகள் அண்மையில் கையெழுத்து இட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, நீடித்த தன்மை கொண்ட சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்த சமாதான உடன்படிக்கையானது, நான்கு முக்கிய பிரச்னைகளை முகாந்திரமாகக் கொண்டு உள்ளது. அதில், தங்கள் இயக்கத்தின் உறுப்பினர்களோ அல்லது அதைச் சேர்ந்த வேறு நபர்களோ அல்லது பயங்கரவாத அமைப்புகளோ, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், ஆப்கானிஸ்தானை ஒரு தளமாகப் பயன்படுத்தப் போவதில்லை என்று தாலிபான் தரப்பு உறுதி அளித்துள்ளது. அமெரிக்கத் தரப்பிலோ, திட்டமிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களின் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது என்று ஒப்புக்கொண்டனர்.

மேலும், அங்கு அமைதியைத் திரும்பக் கொண்டுவருவதற்கான இலக்குடன் பல தரப்பினருக்கு இடையே வரும் 10ஆம் தேதி முதல் கலந்துரையாடல்களைத் தொடங்குவது, நாட்டின் எதிர்காலத்துக்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பது, அதைச் செயல்படுத்துவதற்கான கூட்டு வழிமுறைகளை உருவாக்குவது ஆகியவை இந்த உடன்படிக்கையின் பிற முதன்மையான அம்சங்கள் ஆகும்.

இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக ஆயிரம் தாலிபான் கைதிகளை விடுவிப்பது என்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறிவிட்டார். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, குண்டுகள் எங்கே வெடிக்கும், கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிச் சூடு எங்கு நடக்கும், என்ன மாதிரியான அமைதி உடன்பாடு அந்த நாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை யாராலும் கணித்துவிட முடியாது.

கடந்த ஆண்டு ஜூலையில், பூமியின் பரப்பில் ஆப்கானிஸ்தானின் தோற்றத்தை துடைத்து அழிக்க முடியும்; ஆனால் அதற்காக 10 மில்லியன் மக்களைக் கொல்ல விரும்பவில்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். பயங்கரவாதத்தின் வளர்ச்சி தொடர்பாக இந்தியா முறையிட்டபடி இருந்தாலும், அமெரிக்கத் தரப்பானது நம்முடைய கவலையை சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை.

பயங்கரவாதத் தீ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழித்த பிறகுதான் அந்த நாட்டு அரசு இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தது. பதிலடியாக அமெரிக்கா தொடங்கிய போரை, அந்நாட்டின் முன்னைய அதிபர் ஜார்ஜ் புஷ், மறைந்திருக்கும் எதிரியை வெல்லும் முயற்சி என்று குறிப்பிட்டார். அடுத்த 2001ஆம் ஆண்டு போரில் காபூல், காந்தகார், ஜலாலாபாத், ஹெராத் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டிலேயே ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. சபை கோடிட்டுக் காட்டியபோதும், போரின் முதல் ஆறு மாதங்களில் 717 பொதுமக்கள் அரசாங்கம் மற்றும் வெளிநாட்டுப் படைகளால் கொல்லப்பட்டனர். தாலிபான் இயக்கத்தின் தாக்குதலால் 531 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்தப் போரில் இலட்சக்கணக்கான டாலர் போர்ச் செலவு ஏற்பட்டதையும் 2,400 அமெரிக்க வீரர்கள் உயிர்த் தியாகம் செய்யவேண்டியதானதையும் கடுமையாகச் சாடினார். போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர் முடிவு செய்தார். தாலிபான்கள் கொடூரமான இரத்தக் களரி தாக்குதல்களை நிறுத்தாவிட்டாலும்கூட ஆப்கானிஸ்தானப் பொறியிலிருந்து விடுபட்டு உலகில் தன் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அமெரிக்க அதிபரின் இலக்காக அமைந்தது. அடுத்த நான்கு மாதங்களில் பெரும்பான்மையான அமெரிக்கப் படையினர் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டபோதும், போர் நாட்டம் கொண்ட தாலிபான் படைகள் ஆப்கானில் அமைதியைக் குலைக்காமல் இருக்குமா என்பது சந்தேகமே!

2018 ஏப்ரலில் ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்ட அறிக்கையானது, அல்-கொய்தா இயக்கமானது தாலிபான்களுடன் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் தாலிபான் இயக்கமானது குறைந்தபட்சம் 20 பயங்கரவாத அமைப்புகளையாவது பாதுகாத்துவருகிறது என்றும் தெரிவித்தது. ஆப்கானிஸ்தான் நிலப் பரப்பில் கிட்டத்தட்ட பாதியை ஆட்சிசெய்யும் தாலிபான்களை நம்புவது முட்டாள்தனத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்கா விரும்புவதைப் போல, சர்வதேச அளவிலான தாக்குதல்களுக்கு தங்கள் நாடு களமாக இருக்காது என்பதை உறுதி அளித்துள்ள தாலிபான்கள், பயங்கரவாதம் என்றால் என்ன என்று அமைதி உடன்பாட்டு உரையாடலில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐ.நா. அமைப்பே பயங்கரவாதத்தை சரியாக வரையறுக்க முடியாதபோது, ஆப்கானிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய அமைதி உடன்பாட்டை அமெரிக்கா வலிந்து உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்கும் நோக்கில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.75 ஆயிரம் கோடியை செலவழித்திருப்பதன் மூலம், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கடுமையான விலையைக் கொடுத்துக்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினால் இந்தியாவுக்கு என்ன நேரிடும் என்பது தெளிவாகும். உலக அளவில் ஹெராயின் போதைப்பொருள் வழங்கலில் 90 விழுக்காடு அளவு, ஆப்கானிஸ்தானிலிருந்து மட்டும் வருகிறது. தாலிபான் இயக்கத்தின் வருவாயில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு போதைப்பொருள் கடத்தலில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. ஹெராயின் உற்பத்திக்குத் தேவையான முக்கிய வேதிப் பொருள் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவதாக சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. உள்நாட்டு மருந்து மாஃபியாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற இலக்குடன், இந்தியா இதில் கவனமாக கால்வைக்க வேண்டும். இவ்வாறுதான் தாலிபான்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: நிதின் கட்கரியுடன் தாக்கரே, அஜித் பவார் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.