கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா, கர்நாடகா சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்தல் வருமா, பாஜக ஆட்சி அமைக்குமா என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் என்னை இதுவரை சந்திக்கவில்லை. நான் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுதான் செயல்படுவேன். ராஜினாமா கடிதம் அளித்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 8 பேரின் கடிதம் சட்டத்துக்கு எதிரானது. அவர்கள் அனைவரும் என்னை சந்திக்க கால நீட்டிப்பு செய்துள்ளேன்" என்றார்.