ETV Bharat / bharat

'24 மணி நேரத்தில் 462 உயிர்கள்'- நிலை குலைந்த ஸ்பெயின்!

author img

By

Published : Mar 23, 2020, 7:52 PM IST

Updated : Mar 23, 2020, 8:23 PM IST

மாட்ரிட்: கரோனா வைரஸின் அகோரப் பசிக்கு ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 உயிர்கள் இரையாகின.

Spain coronavirus death toll  COVID-19 outbreak in Spain  Spanish Prime Minister Pedro Sanchez  COVID-19 in European countries  '24 மணி நேரத்தில் 462 உயிர்கள்'- நிலை குலைந்த ஸ்பெயின்!  கரோனா வைரஸ், ஸ்பெயின் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள்

கரோனா வைரஸ் தொற்று கிருமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 89 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த 15 நாள்கள் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 426 உயிர்களை கரோனா அரக்கன் விழுங்கியுள்ளான்.

இதனால் ஸ்பெயினில் கரோனா உயிரிழப்பு 2,182 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா அரக்கனால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மோசமான சாதனையில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது.

உலகெங்கிலும் கரோனா பாதிப்புக்கு 15 ஆயிரம் மக்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். மூன்று லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் பாதிப்பு 400 ஆகவும் உயிரிழப்பு 9 ஆகவும் உள்ளது.

Last Updated : Mar 23, 2020, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.