17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 273 தொகுதிகளில் வெற்றியையும், 29 தொகுதிகளிலில் முன்னிலையிலும் உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா போட்டியிட்ட உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் இரு கோட்டைகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ரேபரேலி தொகுதியில் கடந்த 2004, 2006, 2009, 2014 ஆகிய நான்கு முறையை தொடர்ந்து, தற்போது ஐந்தாவது முறையாக சோனியா காந்தி வெற்றிப் பெற்றுள்ளார்.