நாட்டில் கரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து அத்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ விலையில்லா இலவச உணவு தானியங்கள் மூன்று மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை மேலும் மூன்று மாதங்களுக்கு (செப்டம்பர் வரை) நீட்டிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.