ETV Bharat / bharat

கூட்டு செயல் திட்டம் தயாரிக்க சோனியா காந்தி அறிவுறுத்தல்! - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார்

டெல்லி: விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி
author img

By

Published : Jan 11, 2021, 8:35 PM IST

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் 'கூட்டு செயல் திட்டத்தை' தயாரிக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கையேடு வெளியிடப்படவுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்கனவே தனது ஆதரவை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஜனவரி 15ஆம் தேதி 'கிசான் அதிகார திவாஸை' கடைபிடிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வின்போது, கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டங்களை நடத்துவார்கள்.

டெல்லி எல்லையில் நடந்த 'டெல்லி சாலோ' என்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 47ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

முன்னதாக இன்று(ஜன.11), தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இடதுசாரி கட்சியின் தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோரை சந்தித்து விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.