காந்தியின் 150ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பாதையாத்திரை நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, “நாட்டின் அடித்தளமே காந்தியின் கொள்கைகள்தான். நாம் கண்ட கடைசி ஐந்தாண்டுகள் காந்தியின் கொள்கைகளுக்கு பங்கம் விளைவித்துள்ளது.
அவர் சொன்ன கருத்துகளை மேற்கோள் காட்டுவது சுலபம். ஆனால், அதனை பின்பற்றுவது கடினம். அவரின் பெயரை பயன்படுத்துவோர், அவர் போதித்தவற்றை இந்தியாவிடம் இருந்து எடுத்துவிட நினைக்கிறார்கள். ஆனால், அது எப்போதும் நடக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்பை நாட்டின் அடையாளமாக மாற்ற நினைப்பவர்கள் காந்தியை ஒதுக்கநினைக்கிறார்கள்.
அதிகாரத்தின் மீது ஆசை வைப்பவர்கள் ஒருபோதும் காந்தியை புரிந்துகொள்ள முடியாது. காந்தியின் கொள்கையை காங்கிரஸ் மட்டுமே பின்பற்றுகிறது. அதனைத் தொடர்ந்து செய்யும்” என்றார்.