மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களே ஆன நிலையில் ஆட்சி அமைக்க பாஜக திணறிவருகிறது. கூட்டணி கட்சியான சிவசேனா முதலமைச்சர் பதவியை கேட்டுவரும் நிலையில், பாஜக அதனை தர மறுத்துவருகிறது.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சிவசேனா மூத்தத் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால், காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்ற பேச்சு அடிபட்டது.
இது போன்ற குழப்பமான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சரத் பவார் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு சோனியா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பாஜக-சிவசேனா கூட்டணியின் ஆட்சிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்னர் புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்!