ETV Bharat / bharat

காங். ஆளும் மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை இயற்றுங்கள்!

டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தீர்மானங்களை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Sep 29, 2020, 1:27 AM IST

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை இயற்றுங்கள்!

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.

நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டமுன்வடிவுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் (செப்.27) தனது ஒப்புதலை வழங்கினார்.

இந்நிலையில், நேற்று இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவசர சட்டத்தை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்தச் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை இயற்றுவதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மறுப்பைத் தெரிவிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டப்பேரவைகளைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

சட்டப்பேரவைகளில் அரசியலமைப்பின் 254 (2)ஆவது பிரிவின்கீழ் அந்தந்த மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமுன்வடிவுகளை இயற்ற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) ஒழிப்பு மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஏ.பி.எம்.சி.களை சீர்குலைத்தல் போன்ற விவசாய விரோத சதிகளை முறியடிக்க மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு தந்துள்ள சட்டமியற்றும் அதிகாரம் உதவும்.

அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சியினரும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி, மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் சமர்ப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாபை தொடர்ந்து தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.