ETV Bharat / bharat

இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் 12 மணிநேர ஆலோசனைக்குப் பின் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

sonia gandhi
author img

By

Published : Aug 11, 2019, 4:47 AM IST

Updated : Aug 11, 2019, 9:15 AM IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பெரிய அடியை வாங்கியதோடு மக்களவையில் எதிர்கட்சி என்ற தகுதியைக் கூட பெற முடியாமல் நிர்கதியாய் நின்றது.

இந்தத் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துவந்த ராகுல் காந்தி, தான் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மூத்தத் தலைவர்கள் சரியாக பணியாற்றாமல் தங்களின் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலேயே மும்முரம் காட்டியதாக குற்றச்சாட்டை அவர் வைத்தார்.

rahul gandhi
ராகுல் காந்தி

மேலும் அடுத்த காங்கிரஸ் தலைவராக இளம் தலைமுறையைச் சேர்ந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறியிருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

sonia gandhi
சோனியா காந்தி

ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சரியான தலைவர் இன்றி தத்தளித்துவந்தது. மேலும் பாஜகவின் அலையால் கோவா, கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அடித்துச்செல்லப்பட்டு, பாஜகவின் கரையில் சேர்ந்தனர். மேலும் சமீபத்திய நிகழ்வாக கர்நாடகத்தில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

இந்த நிலை தொடர்ந்தால் பலரும் கட்சியைவிட்டு வெளியேறுவார்கள் என்பதால் விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்தத் தலைவர்களும் பங்கேற்றனர்.

rahul gandhi
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களும் அக்கட்சியின் எம்.பி.க்களும் மண்டல வாரியாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து மண்டல நிர்வாகிகளும், ராகுல் காந்தியே மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ராகுல் காந்தி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு இழுபறி தொடர்ந்தது.

சோனியா காந்தியின் விசுவாசியான முகுல் வாஸ்னிக், முன்னாள் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் புதிய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இச்சமயத்தில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி பாதியிலேயே வெளியேறினர். மேலும் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வதில் தங்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகவே அங்கிருந்து கிளம்புவதாக சோனியா தெரிவித்தார்.

பின்னர் இந்தக் கூட்டத்தில் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியின் பெயரை சிலர் பரிந்துரை செய்ததாகவும், பலரும் சோனியா காந்தியே மீண்டும் தலைவராக விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நேற்றிரவு ஜம்மு - காஷ்மீர் சிக்கல் குறித்த விவாதிப்பதற்காகச் செயற்குழுக் கூட்டத்திற்கு ராகுல் காந்தி மீண்டும் அழைக்கப்பட்டார்.

இதனிடையே நேற்றிரவு 10.50 மணியளவில் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் 12 மணிநேரம் தொடர்ந்த இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியை இடைக்கால காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மூத்தத் தலைவரான குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். இந்த முடிவு அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நீடித்துவந்த குழப்பம் நிறைவடைந்துள்ளது. மேலும் அடுத்தத் தலைவர் தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இந்தப் பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக டெல்லி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராஜிவ் காந்தியின் மறைவுக்கு பின் சில ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவராக 1998ஆம் ஆண்டு சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அவரது சீரிய உழைப்பால் காங்கிரஸ் கட்சி மேம்பட்டதோடு 2004, 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

ஆனால் அதன்பின் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும், தோல்வியை சந்தித்த காங்கிரஸ் தொடர்ச்சியாக அடியை வாங்கிக் கொண்டிருந்தது. இந்த வேளையில் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனது மகன் ராகுல் காந்தியிடம் 2017ஆம் ஆண்டு கட்சியின் தலைமை பொறுப்பை அளித்தார்.

rahul gandhi
ராகுல் காந்தி

ஆனால் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பின் அவர் சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் முந்தைய ஆட்சியில் இருந்ததைவிட கூடுதலாக 8 காங்கிரஸ் எம்பிக்களை மட்டுமே அவரால் மக்களவைக்கு கொண்டுவர முடிந்தது. முன்னதாக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 44 உறுப்பினர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். ராகுல் கவனமாக செயல்பட்டு கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டதால் அவரால் தனது எம்பி பதவியை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

sonia gandhi
சோனியா காந்தி

இந்நிலையில் தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 134 ஆண்டுகால வரலாற்றில் பெரும்பாலும் குடும்ப அரசியலை மட்டுமே செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும், சோனியா காந்தி தனது பாணியில் கட்சியை வழிநடத்தி மீண்டும் முத்திரை பதிப்பாரா என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம்.

Intro:Body:

soniya

Conclusion:
Last Updated : Aug 11, 2019, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.