கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வந்தவர் சாவித்திரியம்மா(84). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சாவித்திரியம்மா காணவில்லையென்று அவரது மகள், சில நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாவித்தியம்மாவை தேடிவந்தனர். இந்நிலையில் அவரது மகனான சுனிலே, அவரைக் கொன்று வீட்டிலேயே புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து சுனிலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிக்கு சுனிலுக்கு மற்றொரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:
“எனது மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம்”, ரமேஷின் உருக்கமான கடிதம் சிக்கியது.!