ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் லஷ்மன் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வீரம் மிக்க ராணுவ வீரரை நாம் இழந்திருக்கிறோம். அவரது உயிர் தியாகத்தை தேசம் என்றும் மறவாது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் தற்போது வரை நான்கு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரியங்கா காந்தி கான்வாய் விபத்துக்குள்ளானது!