கடந்த சில மாதங்களாகவே இந்தியா, அண்டை நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. குறிப்பாக, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவும் தாக்குதல் மேற்கொண்டு பயங்கரவாதிகளை கதி கலங்கவைத்தது. இந்நிலையில், பூஞ்ச் மாவடத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் பெயர் ரோஹின் குமார் ஆகும். இதேபோல், மூன்று நாள்களுக்கு முன்பாக, வடக்கு காஷ்மீர் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தவர் உயிரிழந்தார்.
இருப்பினும், அதற்கு தக்க பதிலடி தரப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ராணுவ அலுவலர் ஒருவர் கூறுகையில், "உரி, பாரமுல்லா பகுதிகளில் பயங்கர ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அந்த தாக்குதலுக்கு, பதிலடி தரப்பட்டது" என்றார்.
இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது.
இதையும் படிங்க: இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் விபத்து; 6 பேர் உயிரிழப்பு