காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் மாதூரில் இயங்கிவரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் நிபுணர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மின்சார சேமிப்பு பற்றியும் மின்சாரத்திற்கு மாற்று எரிபொருள் சக்திகள் பற்றியும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பது பற்றியும் இதில் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் சூரிய ஒளியில் எரியக்கூடிய மின்விளக்குகளை அறிமுகம் செய்துவைத்து விவசாயிகளுக்கு அதனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி மாநிலம் முழுவதும் சூரிய ஒளி மின் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பார். இத்திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தனிநபரும் சோலார் எனர்ஜி மின் திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் செலுத்தும் மின் கட்டணம் குறையும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை