சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜைக்காக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. கோயிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பணிவிடைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 26ஆம் தேதி சூரிய கிரகணம் நடக்கிறது. அன்றைய தினம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, காலை 8.06 மணி முதல் 11.13 வரை நடை சாத்தப்பட்டு இருக்கும்.
அன்றைய தினம் சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். சூரிய கிரகணத்துக்கு பின்னர் நடை மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
சபரிமலை கோயில் தலைமை பூஜாரி, கிரகண நேரத்தில் கோயில் சன்னதி திறப்பது பொருத்தமானதல்ல என்று கூறியிருந்தார். இதனால் கோயில் நடை சூரிய கிரகணத்தில் சாத்தப்படவுள்ளது.
மகர விளக்கு பூஜை நடைபெற இருப்பதால், சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: சபரிமலை கோயில் நடை திறப்பு!